search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூக்களின் விலை உயர்வு"

    • சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உட்பட பல்வேறு பகுதியிலிருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
    • நாளை முகூர்த்த நாள் என்பதால் மல்லிகை பூ கிலோ 2,400 ரூபாயக்கு இன்று விற்பனையானது.

    சேலம்:

    சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உட்பட பல்வேறு பகுதியிலிருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த பூக்களை சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள்.

    கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி பூக்கள் தேவை அதிகரித்தது. இதனால் பூக்கள் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் பூக்கள் செடியிலேயே கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் பூக்களின் வரத்து மார்க்கெட்டுக்கு பாதியாக குறைந்துள்ளது. இதன் காரணமாகவும் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பூக்கள் வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் நாளை முகூர்த்த நாள் என்பதால் மல்லிகை பூ கிலோ 2,400 ரூபாயக்கு இன்று விற்பனையானது. இதேபோல் முல்லை பூ, ஜாதிமல்லி, காக்கட்டான், நந்தியாவட்டம், சம்பங்கி ஆகிய பூக்களின் விலையும் சற்று அதிகரித்து காணப்பட்டது. ஆனாலும் பொதுமக்களும், வியாபாரிகளும் பூக்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

    • நேற்று நடந்த பூ ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.700-க்கு விற்பனையானது.
    • இவற்றை விவசாயிகள் அறுவடை செய்து ப.வேலூரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்திற்கு தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    சுப முகூர்த்த நாட்களை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் நேற்று நடந்த பூ ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.700-க்கு விற்பனையானது.

    பரமத்திவேலூர் தாலுகா பகுதியில் உள்ள பிலிக்கல்பா ளையம், சாணார்பாளையம், வேலூர் பரமத்தி, கரூர் மாவட்டம் சாமங்கி, வேட்ட மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லைப்பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

    இவற்றை விவசாயிகள் அறுவடை செய்து ப.வேலூரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்திற்கு தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர். கடந்த சில வாரங்களாக விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

    கோவில் திருவிழா மற்றும் சுப முகூர்த்த காரணங்களால் பூ தேவை அதிகரித்துள்ளது. பரமத்தி வேலூரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்தில் நேற்று நடந்த ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.700-க்கும், சம்பங்கி ரூ.170-க்கும், அரளி ரூ.280 -க்கும் விற்பனையாகின.

    இதே போல் ஒரு கிலோ சம்பந்தி பூ ரூ.250-க்கும், முல்லைப்பூ கிலோ ரூ.600-க்கும் விற்பனையாகின. சுப முகூர்த்த நாட்களை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் தினசரி பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் குண்டு மல்லி, முல்லை பூ, சம்பங்கி, ரோஜா, செவ்வந்தி, அரளி, கனகாம்பரம் உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு விளையும் பூக்களை கூலி ஆட்கள் மூலம் பறித்து விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் தினசரி பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

    கடந்த வாரம் குண்டுமல்லி ஒரு கிலோ ரூ.400- க்கும்,சம்பங்கி கிலோ ரூ.120- க்கும், அரளி கிலோ ரூ.130- க்கும், ரோஜா கிலோ ரூ.200- க்கும், முல்லைப் பூ ரூ.400- க்கும், செவ்வந்திப்பூ ரூ.200- க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் விற்பனையானது.நேற்று குண்டு மல்லி ஒரு கிலோ ரூ.1200-க்கும், சம்பங்கி கிலோ ரூ.300- க்கும், அரளி கிலோ ரூ.250- க்கும், ரோஜா கிலோ ரூ.300- முல்லைப் பூ கிலோ ரூ.1200-க்கும், செவ்வந்திப்பூ ரூ.320- க்கும், கனகாம்பரம் ரூ.1100-க்கும் விற்பனையானது. பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதால் பூ பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • திருவிழாக்கள் மற்றும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு விளையும் பூக்களை, விவசாயிகள் பரமத்திவேலூரில் உள்ள ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள், பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.150-க்கும், அரளி ரூ.100-க்கும், ரோஜா ரூ.160-க்கும், முல்லைப் பூ ரூ.500-க்கும், செவ்வந்திப்பூ ரூ.180-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும், காக்கரட்டான் ரூ.400-க்கும் ஏலம் போனது.

    இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.700-க்கும், சம்பங்கி ரூ.240-க்கும், அரளி ரூ.180-க்கும், ரோஜா ரூ.240-க்கும், முல்லைப் பூ ரூ.800-க்கும், செவ்வந்திப்பூ ரூ.260-க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும், காக்கரட்டான் ரூ.700-க்கும் ஏலம் போனது.

    பரமத்திவேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் திருவிழாக்கள் மற்றும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்த னர். விலை உயர்ந்துள்ளதால், பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

    • பூக்கள் ஏல சந்தையில் ஆங்கில புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பூக்கள் விலை‌ உயர்வடைந்து உள்ளது.
    • பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் பூ பயிர் செய்துள்ள விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பூக்கள் ஏல சந்தையில் ஆங்கில புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வடைந்து உள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் குண்டு மல்லிகை, முல்லை, சம்பங்கி, ரோஜா, செவ்வந்தி, அரளி, காக்கட்டான் உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டு உள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.

    வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பர மத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை ரூ.1000- க்கும், சம்பங்கி கிலோ ரூ.80-க்கும், அரளி கிலோ ரூ.150-க்கும், ரோஜா கிலோ ரூ.160-க்கும், முல்லைப் பூ ரூ.800-க்கும், செவ்வந்திப்பூ ரூ.80-க்கும், கனகாம்பரம் ரூ.1000-க்கும், காக்கட்டான் ரூ. 400-க்கும் ஏலம் போனது.

    இந்த நிலையில் ஆங்கில புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.1800-க்கும், சம்பங்கி கிலோ ரூ150- க்கும், அரளி கிலோ ரூ.200-க்கும், ரோஜா கிலோ ரூ.280-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.1600-க்கும், செவ்வந்திப்பூ ரூ.180-க்கும், கனகாம்பரம் ரூ.1500-க்கும், காக்கட்டான் ரூ.700-க்கும் ஏலம் போனது. பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் பூ பயிர் செய்துள்ள விவ

    சாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • குண்டுமல்லி கிலோ ரூ.1000-க்கு விற்பனையானது.
    • பன்னீர் ரோஸ், உள்ளிட்ட அனைத்து வகை பூக்களையும் சாகுபடி செய்து வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் முக்கிய தொழிலாக இருந்து வருவது விவசாயம், இதில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூக்கள் சாகுபடி செய்கின்றனர்.

    அதிகப்படியாக குண்டுமல்லி, சாமந்தி, சம்பங்கி, செண்டு மல்லி, முல்லை, காக்கனா, கோழிக்கொண்டை, பன்னீர் ரோஸ், உள்ளிட்ட அனைத்து வகை பூக்களையும் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இங்கு சாகுபடி செய்யப்படும் பூக்கள் வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    தொடர்ந்து மாவட்டத்தில் திருமண வைபவங்கள், உள்ளூர் திருவிழாக்கள், சுப நிகழ்ச்சிகள், கோவில் கும்பாபிஷேகம்,என நடைபெற்று வந்தது. பூக்களின் விலை அதிகரித்திருந்த நிலையில் ஆடி மாதத்தில் பூக்களின் விலை கிடுகுடு சரிவை ஏற்படுத்தியது. அதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    தற்பொழுது ஆடி மாதம் முடிந்து ஆவணி பிறந்துள்ளதால் திருமண வைபவங்கள் கோவில் விழாக்கள் என தொடங்கியது. மேலும் நாளை விநாயகர் சதுர்த்தி என்பதால் சராசரி விலையை விட இன்று பூக்களின் விலை மேலும் கூடுதல் விலைக்கு விற்பனையானது.

    இன்று தருமபுரி பூ மார்க்கெட்டில் மாலைகளுக்கு பயன்படும் சம்பங்கி பூ கிலோ 200 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் கிலோ 160 ரூபாய்க்கும், அரளி கிலோ 250 ரூபாய்க்கும், குண்டு மல்லி கிலோ 1000 ரூபாய்க்கும், முல்லை கிலோ 700 ரூபாய்க்கு, சாமந்தி கிலோ 120 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டது‌.

    இது சம்பந்தமாக விவசாயிகள் கூறும்போது கடந்த ஆடி மாதம் முழுவதும் சுப காரிய நிகழ்ச்சிகள் நடைபெறாததால் பூக்களின் விலை படு வீழ்ச்சி அடைந்தது. பூக்களை பறிப்பதற்கான கூலி கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டோம், ஆடி மாதம் முடிவடைந்ததை அடுத்து தற்பொழுது பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

    மேலும் விநாயகர் சதுர்த்தி என்பதால் அதிக அளவில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.

    ×